ETV Bharat / bharat

தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை! - கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர்

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரை கைது செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் சுங்கத் துறைக்கு தடை உத்தரவிட்டுள்ளது.

தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை!

author img

By

Published : Oct 19, 2020, 10:10 PM IST

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜாந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ஏறத்தாழ 30 கிலோ எடைகொண்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் கேரள மாநில அரசால் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கம் துறையும் இணைந்துகொண்டது. இந்த வழக்கில் கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட பலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் சுங்க அலுவலர்கள் தொடர்ந்து அக்.9,10 ஆகிய இரண்டு நாள்கள் விசாரணை நடத்தியது.

அதனடிப்படையில், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த சுங்கத்துறை திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அன்று திடீரென உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் தற்போது தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதற்கிடையே, உடல் நலம் குன்றிய தனக்கு முன் பிணைக் கேட்டு அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரை கைது செய்ய ஆக்.23ஆம் தேதிவரை சுங்கத் துறைக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.

முன்னதாக, தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக 303 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்க இயக்குநரகம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.