கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ரஜனி (38) என்பவருக்கு அண்மையில் மார்பகத்தில் கட்டி உருவானது. இதனால், அவர் கடந்த பிப்ரவரி மாதம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார். பின்னர் அங்குள்ள மருத்துவர்கள் ரஜனியின் திசு மாதிரிகளை சேகரித்து அதே மருத்துவமனையின் ஆய்வகத்துக்கும், அருகில் உள்ள தனியார் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை ஆய்வகத்திலிருந்து முடிவுகள் வருவதற்கு முன்னரே, தனியார் ஆய்வகத்திலிருந்து திசு மாதிரியைக் கொடுத்த ஏழு நாள்களில் முடிவுகள் கிடைத்தன.
தனியார் ஆய்வகப் பரிசோதனையில் ரஞ்சனிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகத் தெரியவந்தது. இதனால் உடனடியாக மருத்துவர்கள் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை ரஜனிக்கு அளித்தனர். இந்த சிகிச்சையால் தலைமுடி உதிர்தல், குமட்டல், உடல் பலவீனம் போன்ற பல பக்கவிளைவுகள் இவருக்கு ஏற்பட்டன. இந்த நிலையில், மருத்துவர்கள் இரண்டாம் கட்ட கீமோதெரபி சிகிச்சைக்குத்தயாராகும் போதுதான் அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட திசு மாதிரியின் பரிசோதனை முடிவு வந்தது.
அதில் ரஞ்சனியின் மார்பகத்தில் இருந்த கட்டி, புற்றுநோய் கட்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். புற்றுநோயே இல்லாதவருக்கு புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டதால் ரஜனி கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவிடம், புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களு்ககு உத்தரவு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 25ஆம் நாள் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கேரள அரசு அந்தப் பெண்ணுக்கு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது.
இதையும் படியுங்க:
பெண் வயிற்றில் கட்டியா, கர்ப்பமா என்பது கூட தெரியாத மருத்துவர்கள்