எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே, கேரள காவல்துறை அவசர சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்கியுள்ளார். அவமதிக்கும் வகையிலோ, அருவருக்கத்தக்க வகையிலோ அவதூறு செய்தி வெளியிடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக அவதூறு செய்தி பரப்பும் பட்சத்தில், அவர்களுக்கு ஐந்தாண்டு சிறை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றம் கடுமையாக கருதும் பட்சத்தில் இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "கேரளாவை ஆளும் இடது ஜனநாயக கூட்டணி, சமூக வலைதலங்கள் மூலம் அவதூறு செய்தியை பரப்பினால் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.