திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ஏறத்தாழ 30 கிலோ எடைகொண்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை ஜூலை 11ஆம் தேதி பெங்களூருவில் வைத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப். 30) எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. அப்போது, முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க உள்ளதாகவும், அதனைப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க....அரசு விழிப்புணர்வு ஓவியத்தை அழித்து திருமாவளவனின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கைது