ETV Bharat / bharat

மேனகா காந்தி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: கேரளாவில் யானை உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மூத்தத் தலைவர் மேனகா காந்தி தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார்.

கேரளா காங்கிரஸ் வலியுறுத்தல்
கேரளா காங்கிரஸ் வலியுறுத்தல்
author img

By

Published : Jun 6, 2020, 1:14 AM IST

கேரளாவில் யானை கொல்லப்பட்டது குறித்து பாஜக கட்சியின் மூத்த தலைவரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி தனது ட்விட்டரில், "இந்தியாவிலே அதிக அளவில் வன்முறைகள், குற்றச் செயல்கள் நடக்கக் கூடிய மாவட்டம் மலப்புரம்தான். அந்த யானை கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது.

அம்மாவட்டம் இதுபோன்ற சம்பவங்களுக்கு பெயர்போனது. யானையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது இதுவரை அதற்கு காராணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய மலப்புரத்தில் அவர்களை குறிவைத்து பேசியதாக கூறப்படும் மேனகாவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதாலா மேனகா காந்தி தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், “மலப்புரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கெட்டவர்கள் போல் சித்தரிக்கும் வகையில் மேனாகா காந்தியின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “யானை கொல்லப்பட்ட சம்பவம் பாலக்காடு மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி தொகுதியான வயநாட்டில் பாஜகவினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர்” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: யானை கொல்லப்பட்ட வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.