கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த சரக்கு விமானத்தில் வந்த பெட்டிகளை, டெலிவரி செய்வதற்காக சரக்கு கிடங்கில் வைத்திருந்து உள்ளனர்.
இந்நிலையில், சுங்கத்துறை அலுவலர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கிடங்கில் திடீர் சோதனை நடத்தியதில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தங்கம் சுமார் 30கிலோ எடை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பெட்டியை அனுப்பியது யார் என்பது குறித்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.