ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல்: ஃபாசில் ஃபரீத்திடமிருந்து பெற்ற வாக்குமூலம்!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக உள்ள ஃபாசில் ஃபரீத்திடம் போன் மூலம் வாக்குமூலத்தை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) அலுவலர்கள் பெற்றனர்.

Kerala gold smuggling  Kerala Customs officials  Kerala news  Gold smuggling  Accused  ஸ்வப்னா  பாசீல் பரீத்  கேரளா தங்கக் கடத்தல்  தேசியப் புலனாய்வு முகமை  தங்கக்கடத்தல் வழக்கு
கேரளா தங்கக் கடத்தல்: பாசீல் பரீத்திடமிருந்து பெற்ற வாக்குமூலம்
author img

By

Published : Jul 13, 2020, 8:00 AM IST

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன், சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு சரக்கு வந்தது. சுங்கத் துறை அலுவலர்கள் அதனை ஆய்வு செய்தபோது, அதில் 30 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. தூதரகப் பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால், அதனைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது.

இந்தக் கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அலுவலராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரிய வந்தது. தங்கக் கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், கண்ணீர் மல்க பேசும் ஒளிப்பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில், 'தனக்கும் அந்த சரக்கு பொட்டலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ஸ்வப்னாவைத் தேடி வந்த கேரள காவல் துறையினர், நேற்று முன் தினம் (ஜூலை 11) பெங்களூருவில் வைத்து அவரையும், அவரின் நண்பரான சந்தீப் நாயரையும் கைது செய்தனர். இவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக ஃபாசில் ஃபரீத்தை சுங்கத்துறை அலுவலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது, இவர் துபாயில் இருக்கிறார் என்றும் போன்மூலம் தனது நண்பர்களுடன் பேசி கடத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ஸ்வப்னாவும் சந்தீப் நாயரும் சிறைக்குச் செல்லாமல் தனிமைப்படுத்தும் மையத்தில் வைக்கப்படவுள்ளனர்.

ஸ்வப்னா திருச்சூரில் உள்ள கரோனா தனிமைப்படுத்தும் மையத்திலும், சந்தீப் நாயர் அங்கமாலியில் உள்ள கரோனா தனிமைப்படுத்தும் மையத்திலும் வைக்கப்படவுள்ளனர். இதனிடையே ஃபாசில் ஃபரீத்திடம் போன்மூலம் வாக்குமூலத்தை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விகாஸ் துபே என்கவுன்ட்டர்: கதிகலங்கி உச்ச நீதிமன்றத்தை நாடிய காவல் உதவி ஆய்வாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.