செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "வழக்கமாக இயக்கப்படும் ராஜதானி ரயில்களின் நிறுத்தங்களைவிட தற்போது இயக்கப்படும் சிறப்பு ராஜதானி ரயில்களின் நிறுத்தங்களை அதிகரிக்க நாங்கள் கோரிக்கைவிடுத்துள்ளோம்.
கேரளாவில் தற்போது மூன்று நிறுத்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் வட மாவட்ட மக்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு ஏதுவாக அங்கு நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
அதே நேரத்தில், பயணிகள் கரோனாவால் பாதிக்கப்படும் இடரைத் தவிர்க்கும்வகையில், ரயில்கள் மாநிலத்திற்குள் (கேரளா) நுழையும் முன் இடைவிடாது இயக்கவும் மற்ற மாநிலங்களில் ரயில்கள் நிறுத்துவதைத் தவிர்க்கும்படியும் நாங்கள் கோரியுள்ளோம்.
அவர்களை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த ரயில் நிலையங்களில் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் வீடுகளிலேயே தங்களைக் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தவுடன் பயணிகள் பாஸ்களைப் பெற வேண்டும். பாஸ் இன்றி வருபவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். ரயில் நிலையங்களில் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பணிகளை டிஐஜி அக்பர் மேற்பார்வையிடுவார்.
வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் ஒரே அறையில் இருக்க வேண்டும். வீடுகளில் உள்ள மற்றவர்களிடம் குறிப்பாகக் குழந்தைகள், வயதானவர்களுடன் உரையாடக் கூடாது" என்றார்.
இதுவரை 33 ஆயிரத்து 116 பேர் கேரளாவுக்குச் சாலைகள் மூலம் வந்துள்ளதாகவும் அவர்களில் 19 ஆயிரம் பேர் சிவப்பு மண்டலங்களிலிருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து ரயில்களையும் ஏசி ரயில்களாக இயக்க வேண்டும் என்று அவர் கோரிக்கைவைத்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் கோடியல்ல, வெறும் ரூ.4 லட்சம் கோடிதான் - கபில் சிபல் தாக்கு