கேரளாவில் பாலக்காடு பகுதியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் திருச்சூர் நோக்கிப் புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தின் ஓட்டுநர் ஒரு கையில் செல்போனை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தொலைவிற்கு எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் செல்போனை ரசித்தபடியே ஜாலியாக பேருந்தை ஓட்டியுள்ளார்.
இதைப் பார்த்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், தனது செல்போனில் உடனடியாக வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பாக, அப்பயணி அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓட்டுநரின் செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அம்மா காப்பாத்துங்க' - குட்டியின் கதறல்: பதறிய தாயின் பாசப் போராட்டம்!