ETV Bharat / bharat

கரோனா: கேரளாவில் ஊரடங்கில் சில தளர்வுகள் - கரோனா பாதிப்பு: கேரளாவில் தலர்வுகளை கொண்டுவந்த முதலைச்சர்

திருவனந்தபுரம்: மத்திய அரசின் உத்தரவின்படி மாநில நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப சில தளர்வுகளைக் கேரள முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார்.

முதலமைச்சர் பினராயி விஜயன்
முதலமைச்சர் பினராயி விஜயன்
author img

By

Published : Apr 20, 2020, 11:43 AM IST

ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் மாநில அரசுகள், அங்குள்ள கரோனா சூழலைப் பொறுத்து ஊரடங்கில் தளர்வை அறிவித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநிலத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“கேரளாவில் 14 மாவட்டங்கள் பச்சை, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி , சிவப்பு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பச்சை மண்டலம் என வகைப்படுத்தப்பட்ட இடுக்கி, கோட்டயம் மாவட்டங்கள் அரசின் உத்தரவின் விதிகளைக் கடைப்பிடித்து இயல்பாகச் செயல்படலாம்.

ஆரஞ்சு பி மண்டலத்தில் ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, திரிசூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இங்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த இரண்டு மண்டலங்களிலும், கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் திறக்கப்படும். திருமணங்கள், இறுதிச்சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.

மேலும், ஆரஞ்சு ஏ மண்டலக் கட்டுப்பாட்டின்கீழ் வகைப்படுத்தப்பட்ட எர்ணாகுளம், கொல்லம் மாவட்டங்களில் ஏப்ரல் 23ஆம் தேதிவரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

சிவப்பு மண்டலமாக உள்ள காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து மாநில காவல் துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா கூறுகையில், “பொதுமக்கள் எந்த மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசின் வழிகாட்டுதல்களையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் வெளியே செல்வது அனுமதிக்கப்படாது” என்றார்.

இதையும் படிங்க: பொதுவெளியில் எச்சில் உமிழ்ந்தால் கடும் நடவடிக்கை...! - நாராயணசாமி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.