பாஜக தலைவர் ஜே பி நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட தேசவிரோத சக்திகள் ஜேஎன்யுவில் தேசத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்களின் இந்த நடவடிக்கைகளை விசாரித்த சட்ட அமைப்புகள், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதமே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராக இருந்தன.
நாட்டை பிளவுபடுத்தும் இந்தக் கும்பலைத் தண்டிக்க, காவல் துறையினர் கெஜ்ரிவாலின் அனுமதியைக் கோரி காத்திருந்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும், காவல் துறையினருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவை பிளவுபடுத்த விரும்புவோருக்கு ஆதரவாக கெஜ்ரிவால் செயல்படுவது ஏன் என்று அவர் டெல்லிவாசிகளுக்கு சொல்ல வேண்டும். தேச விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், அது அவரது வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதால் அமைதியாக இருக்கிறாரா" என்று பதிவிட்டுள்ளார்.
-
They sought Kejriwal’s permission to prosecute this tukde tukde gang but one year later, till y’day, no permission was granted. Kejriwal must tell Delhi why is he supporting those who want to break India? Is it because acting against these anti-nationals will hurt his vote bank?
— Jagat Prakash Nadda (@JPNadda) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">They sought Kejriwal’s permission to prosecute this tukde tukde gang but one year later, till y’day, no permission was granted. Kejriwal must tell Delhi why is he supporting those who want to break India? Is it because acting against these anti-nationals will hurt his vote bank?
— Jagat Prakash Nadda (@JPNadda) January 27, 2020They sought Kejriwal’s permission to prosecute this tukde tukde gang but one year later, till y’day, no permission was granted. Kejriwal must tell Delhi why is he supporting those who want to break India? Is it because acting against these anti-nationals will hurt his vote bank?
— Jagat Prakash Nadda (@JPNadda) January 27, 2020
டெல்லி சட்டப்பேரவை பரப்புரையின்போது கன்னையா குமார் விவகாரத்தை முன்வைத்து பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறது. கன்னையா குமார் உள்ளிட்டோரை விசாரிக்க தேவையான உரிய அனுமதியை பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் பெற காவல் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் மக்கள் விருப்பப்படி பாஜக தோற்கும் - சச்சின் பைலட்