இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர். என்றழைக்கப்படும் சந்திரசேகர் ராவ் நுரையீரல் எரிச்சல் காரணமாக செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் போன்ற மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவப் பரிசோதனைகளை அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் எம்.வி. ராவ் (பொது மருத்துவம்), நவ்னீத் சாகர் ரெட்டி (நுரையீரல் சிறப்பு மருத்துவர்), பிரமோத் குமார் (இதய நோய் சிறப்பு மருத்துவர்) ஆகியோர் நடத்தினர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஹிமா கோஹ்லி பதவியேற்பு!