ETV Bharat / bharat

தோல்வி அடைந்த நாடுகள் செய்த தவறை இந்தியா செய்துவிடக் கூடாது - மூத்த பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசு - Chief Economist of the World Bank

உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசுவுடன் நமது ஈநாடு இணை ஆசிரியர் என்.ஸ்வா பிரசாத் நடத்திய நேர்காணலில் அவர், விமர்சனத்தை சூழ்ச்சி என கருதி நிராகரிக்கும் போக்கை சில நாடுகள் பின்பற்றி தோல்வி அடைந்துள்ள நிலையில், அந்த தவறை இந்தியா செய்துவிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கவுசிக் பாசு
கவுசிக் பாசு
author img

By

Published : Jul 14, 2020, 9:47 PM IST

நேர்காணலின் தொடர்ச்சி...

கேள்வி: லடாக்கில் சீனா நடத்திய தாக்குதலுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி தரும் வகையில் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை இந்தியா குறைக்க முயற்சித்துவருகிறது. இது, இந்திய நிறுவனங்களுக்கு பலன் அளிக்குமா?

இது அடையாள நடவடிக்கையே. இது நல்லதாகவோ, தீயதாகவோ பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி: புதியச் சூழலுக்கு ஏற்ப, தொழில்துறை சார்ந்த கொள்கைகளை மாற்றியமைத்தால் பெரும் வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவுக்கு பதில் இந்தியாவில் முதலீடு செய்யும் என சில வல்லுநர்கள் கூறுகின்றனர். இது சாத்தியமா?

முன்னதாக, நான் தெரிவித்தது போல், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க இந்தியாவில் வாய்ப்பு உருவாகியுள்ளது. முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சி பட்டியலில் இந்தியாவை முன்னிருத்தவதற்கான அடிப்படை கட்டமைப்பு இங்கு உள்ளது. கொள்கை முடிவு எடுக்கும்போது நாம் தொழில்துறை சார்ந்து யோசிப்பதில்லை. சந்தைமயமாக்கல், நிறுவனமயமாக்கலில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், 16 பில்லியன் டாலர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டது. ஒரே மாதத்தில் அதிக அளவில் நடைபெற்ற முதலீடு இதுதான். சீனாவிற்கு பதில் தற்போது வியட்நாம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு சிறிய அளவு மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்யப்படுகிறது. மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதற்கு பதில் நம்பிக்கையை விதைத்து அறிவியல் மற்றும் பொறியியலுக்கு முக்கியத்துவம் அளித்து தொழில்துறை சார்ந்த கொள்கை முடிவு எடுக்கும் நவீன நாடாக வெளியுலகுக்கு காட்ட வேண்டும். இன்னும் தாமதம் ஆகவில்லை. வளர்ச்சியை ஊக்கப்படுத்த நம்பகத்தன்மை எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறது என்பது பதிவு செய்யப்படவில்லை. இந்த வகையில், இந்தியா துரதிருஷ்டவசமாக பின் வாங்கியுள்ளது.

கேள்வி: கரோனாவுக்கு பிறகான காலத்தில், எம்மாதிரியான மாற்றங்கள் நிகழும் என எதிர் பார்க்கிறீர்கள்?

உலக பொருளாதாரம் பெரும் மாற்றத்தை சந்திக்கவுள்ளது. இணைய தொழில்நுட்ப பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என நினைக்கிறேன். தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை பெரும் வளர்ச்சி அடையும். மருத்துவமனைகள் பெருகி, புதிய ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம் சுகாதாரத்துறை மேம்படும். அனைவருக்கும் மருத்துவ வசதி செய்து தரப்படும். ஐடி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவில் நல்ல அடிப்படை கட்டமைப்பு உள்ளது. இதனை சொல்லிதான் தெரிய வேண்டும் என இல்லை.

தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இத்துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இத்துறை சார்ந்த வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள, அரசியல் மற்றும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும். செய்தித்தாள், நாளிதழ், தொலைக்காட்சி என உலக ஊடகங்கள் அனைத்தும் வளர்ச்சி பாதையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தகவல் வெளியிட்டுவந்தது. ஆனால், அது தற்போது மாறியுள்ளது.

இந்தியா குறித்து உலகின் பல்வேறு பகுதிகளில் கவலை தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பிளவுப்படுத்தும் அரசியல், அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்காதது, விமர்சனங்களை எதிர்ப்பது அதிகரித்துள்ளது. இதில் சிறப்பாக செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதிக்க வேண்டும். விமர்சனத்தை சூழ்ச்சி என கருதி நிராகரிக்கும் போக்கை சில நாடுகள் பின்பற்றி தோல்வி அடைந்தன. அதனை இந்தியா செய்யக் கூடாது.

இதையும் படிங்க: 'நமது தேவை வெறும் தலைப்புச் செய்திகள் அல்ல' - கவுசிக் பாசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.