ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தைச் செப்டம்பர் 19ஆம் தேதி வரை, திகார் சிறையில் அடைப்பதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் இருந்த சிறையிலேயே சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், அரசியல் பழிவாங்கல் காரணமாக போதிய ஆதாரங்களின்றி, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தார். மேலும் காஷ்மீர் விவகாரம், பொருளாதார வீழ்ச்சியை இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் திசைதிருப்ப முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.