ETV Bharat / bharat

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

author img

By

Published : Mar 29, 2019, 9:59 PM IST

புதுடில்லி: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் மூன்று நிறுவனங்களின் இயக்குனர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை இன்று அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை

கடந்த, 2007 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து ரூ. 305 கோடி நிதி கிடைப்பதற்கு எப்.ஐ.பி.பி., எனப்படும் அன்னிய முதலீட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

ani
கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் முடக்கம்

இதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், அப்போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் அதன் இயக்குனர்களான பீட்டர் முகர்ஜி, ராணி முகர்ஜி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற்றுத் தர நிதியமைச்சகத்தில் தனக்குள்ள செல்வாக்கை கார்த்தி சிதம்பரம் பயன்படுத்தியதாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 2018 பிப்ரவரி 28 ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. பின்னர் அவர் ஜாமினில் வெளிவந்தார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கார்த்திக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரூ. 54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.