கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிடவை மூடப்பட்டுள்ளன. (எனினும், கோவிட்-19 பரவல் குறைந்தபாடில்லை).
இந்நிலையில், கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறையின் கீழ், செயல்படும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் பூஜைகளை நேரலையாகப் பக்தர்களுக்கு ஒளிபரப்ப, அம்மாநில அரசு ஆயத்தமாகி வருகிறது.
இதற்காக அறநிலையத்துறை புதிதாக ஒரு செயலியையும், இணைய தளத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே, அத்துறையினர் அனைத்து துணை ஆணையர்கள், அலுவலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக இந்து அறநிலையத்துறையின் கீழ், 34 ஆயிரம் கோயில்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிகள் : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!