நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தீபக் பாட்டீல் என்ற பேராசிரியர் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வந்துள்ளார். அவ்வப்போது இணைய தள இணைப்பு பெரும் இடையூறாக இருந்து வந்துள்ளது.
இந்தத் தருணத்தின் அவசியத்தை உணர்ந்த அவர் ஒரு செயலியை உருவாக்கினார். அந்த செயலியின் பெயர் 'டார்கெட் -100', இது பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. அதில் அனைத்து வினாத்தாள்கள், சி.இ.டி, ஜே.இ.இ குறிப்புகள், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து தீபக் கூறுகையில்," எனது மாணவர்களுக்கு உதவ முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கிராமப்புறங்களில் மோசமான இணைய இணைப்பு இருப்பதால் கற்பித்தல் மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், எனது மாணவர்களுக்கு பெரிதும் உதவுகின்ற ஒரு செயலியை உருவாக்கிய பின்னரே நான் நிம்மதியாக இருந்தேன்" என்றார்.