கர்நாடக அரசின் பள்ளிக் கல்வித்துறை, கல்வி ஆலோசர்களுடனும், தனியார் பள்ளி கூட்டமைப்பினருடனும், மருத்துவக் குழுக்களுடனும் ஆலோசனை நடத்தியது. அதில், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய கர்நாடக மாநிலத்தின் தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், 'எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. இதனை மீறி ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு என தனியே பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை அறிந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மேலும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை ஆராயக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் குமார் கூறினார்.