கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், இரண்டு மாநிலங்களிலும் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. முக்கியமாக, பெல்காம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாலாபிரபா ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கடக் (Gadag) மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துவருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க பல கிராமத்தில் அம்மாநில அரசு படகுகளை பயன்படுத்திவருகிறது. சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படகு மூலம் 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.