ETV Bharat / bharat

மத்திய அமைச்சர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு: கர்நாடக அரசு அறிவிப்பு - கர்நாடகாவில் மத்திய அமைச்சர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு

வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகா வந்து செல்லும் மத்திய அமைச்சர்கள், மாநில அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகா
கர்நாடகா
author img

By

Published : May 26, 2020, 4:31 PM IST

நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் நேற்று தொடங்கிய நிலையில், விமானம் மூலம் மத்திய அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா நேற்று பெங்களூரு வந்த நிலையில், அவருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இது அம்மாநில மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகா வந்து செல்லும் மத்திய அமைச்சர்கள், மாநில அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, “தங்கள் பயண தேதிக்கு முந்தைய இரண்டு நாட்களுக்குள், ஐசிஎம்ஆரால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, கரோனா தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டு, மருத்துவ சான்றிதழ் வைத்திருக்கும் எவருக்கும், கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்கள் ஏழு நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து தங்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்னும் புதிய அறிவிப்பையும் கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய அமெரிக்க தம்பதி கண்டுபிடித்த விலை மலிவான வென்டிலேட்டர்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.