பெங்களூரு: கன்னட அமைப்புகள் டிசம்பர் 5ஆம் தேதி (சனிக்கிழமை) மாநிலம் தழுவிய பந்த் அறிவித்துள்ளன. இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகளை அடைக்க வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் நாளை வேலை நிறுத்தம் (பந்த்) நடைபெறும் நிலையில் மாநிலத்தில் எவையெல்லாம் இயங்கும், இயங்காது என்பது குறித்து பார்க்கலாம்.
இயங்கும்:
- மருத்துவமனைகள்
- மருந்தகங்கள்
- அத்தியாவசிய பொருள்கள் கடைகள்
- மாநில அரசு பேருந்து போக்குவரத்து
- மாநிலங்களுக்கு இடையேயான அரசு பேருந்து போக்குவரத்து குறைந்த அளவில் இயக்கப்படும்
- மெட்ரோ சேவைகள்
- ரயில் சேவைகள்
- பெட்ரோல், டீசல் எரிபொருள் நிலையங்கள்
- ஹோட்டல்கள்
- கடைகள், பெருவணிக மையங்கள்
இவையெல்லாம் இயங்காது:
- கார்மெண்ட் தொழிற்சாலைகள்
- ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகள் (இச்சேவை வழங்கும் தொழிலாளர் அமைப்புகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன)
இருப்பினும் கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகள் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கடைகளை அடைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் கடைகள் வழக்கம்போல் இயங்குவதில் ஐயப்பாடு எழுந்துள்ளது.
பிஎஸ் எடியூரப்பா வேண்டுகோள்
இந்நிலையில் பெங்களூரு நகரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் கமல்பந்த் தெரவித்துள்ளார்.
இதற்கிடையில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் என கன்னட அமைப்பினர்களுக்கு மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்ப்பு
மாநில அரசு மராட்டிய மாநிலத்தின் மேம்பாட்டு வாரியத்துக்கு ரூ.50 கோடி அளிக்க முன்வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கர்நாடகத்தில் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளதன் மூலம் பிஎஸ் எடியூரப்பா அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்துவதாக இக்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதையும் படிங்க: வரலாற்றிலிருந்து திப்பு சுல்தானை துடைத்தெறிவோம் - பிஎஸ் எடியூரப்பா