ETV Bharat / bharat

கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைப்பு: பாஜகவினர் தர்ணா - karnataka assembly adjourned

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து அவையை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

karnataka assembly
author img

By

Published : Jul 18, 2019, 7:54 PM IST

கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தனர். இதனால், அம்மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

இந்நிலையில், இன்று காலை கர்நாடக சட்டப்பேரவை கூடியது. அதிருப்தி எம்எல்ஏக்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இதில் காரசாரமாக பேசிய முதலமைச்சர் குமாரசாமி, இன்றைக்குள் வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தார். பின்னர் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்குமாறு வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தங்கள் எம்எல்ஏக்களை பாஜக கடத்திவிட்டதாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் புகார் தெரிவித்தது. அப்போது, இருதரப்பு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை அரை மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பாஜகவின் கோரிக்கையை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் இன்று இரவு முழுவதும் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.

Intro:Body:

Bengaluru: BJP MLAs to sit on an over night 'dharna' in the state assembly demanding that the Speaker replies to the Governor's letter and holds a floor test. Assembly adjourned for the day. #Karnataka

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.