புதுச்சேரியில் அக்டோபர் ஒன்றாம் தேதி மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என மருத்துவர்களும், செவிலியர்களும் புதுச்சேரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று (அக்.3) பணியை புறக்கணித்து, சுகாதாரத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி மாநில அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - அரசு மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி: மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து காரைக்கால் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.