தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. வேட்டி தினத்தை சிறப்பிக்கும்விதமாக இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நேற்று வேட்டி அணிந்து தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றினர்.
இந்நிலையில் எப்போதும் வெஸ்டர்ன் கலாசாரமான பேன்ட், சட்டை அணிந்திருக்கும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, உலக வேட்டி தினத்தை முன்னிட்டு நேற்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் தனது அலுவலகப் பணிகளையும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இச்சம்பவம் தமிழர் கலாசாரத்தின் மீது பற்றுள்ள பலரது பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச வேட்டி தினம்: புதிய வேட்டி சட்டை அறிமுகம்