ETV Bharat / bharat

'பாஜகவுடன் தொடர்பு?' - ராகுல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார்... மூத்தத் தலைவர்கள் பதிலடி! - சோனியா காந்தி

சென்னை: இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மூத்தத் தலைவர்கள் கடிதம் எழுதியதன் பின்னணியில் பாஜக இருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Kapil Sibal hits out at Rahul
Kapil Sibal hits out at Rahul
author img

By

Published : Aug 24, 2020, 2:02 PM IST

காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து 23 மூத்தத் தலைவர்கள் கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நெருக்கடியான சூழலில் செயற்குழுக் கூட்டம், இன்று காலை காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியதும், சோனியா காந்தி தனக்கு தலைவர் பதவியில் தொடர்வதில் விருப்பமில்லை என்றார். இருப்பினும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி கட்சித் தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோவல கே.சி. வேணுகோபால், ஏ.கே. அந்தோணி உள்ளிட்ட தலைவர்களும் சோனியா காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் அரசியல் குழப்பம் எழுந்திருந்தபோது தலைமை குறித்து கடிதம் எழுதாமல், அவர் (சோனியா காந்தி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இந்தக் கடிதம் எழுதப்பட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், கட்சி பிரச்னைகளை பொதுவெளிக்குத் தலைவர்கள் எடுத்துச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, 'உள்கட்சி பிரச்னைகளை செயற்குழுக் கூட்டத்தில்தான் விவாதிக்க வேண்டுமே தவிர, ஊடகங்களில் அல்ல' என்றார். மூத்தத் தலைவர்கள் கடிதம் எழுதியதன் பின்னணியில் பாஜக இருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டையும் ராகுல் காந்தி முன்வைத்தார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் கடும் பதிலடி கொடுத்தனர். காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தி நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக கூறுகிறார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாதாடி வெற்றிபெற வைத்தேன்.

  • Rahul Gandhi says “ we are colluding with BJP “

    Succeeded in Rajasthan High Court defending the Congress Party

    Defending party in Manipur to bring down BJP Govt.

    Last 30 years have never made a statement in favour of BJP on any issue

    Yet “ we are colluding with the BJP “!

    — Kapil Sibal (@KapilSibal) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மணிப்பூரில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் அரசைக் காப்பாற்றினோம். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னையிலும் பாஜகவுக்கு ஆதரவாக எந்தவொரு கருத்தையும் நாங்கள் வெளியிடவில்லை. ஆனாலும், நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோம்" என்று பதிவிட்டார்.

செயற்குழுக் கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், "பாஜகவுடன் இணைந்து நாங்கள் செயல்படுகிறோம் என்பதை நிரூபித்தால், அனைத்து பதவிகளையும் விட்டு விலகத் தயார்" என்றார்.

பாஜகவுடன் மூத்தத் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக, ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருப்பதும், அதற்கு மூத்தத் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை விவகாரம்: மோடிக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.