ETV Bharat / bharat

'காஷ்மீர் மக்களுக்கு நடப்பது நாளை உங்களுக்கும் நடக்கலாம்' - எச்சரிக்கும் முன்னாள் ஐஏஎஸ்! - Kannan Gopinathan resignation

காஷ்மீர் மக்களின் உரிமை பறிக்கப்பட்டதுபோல் நாளை இந்தியாவின் மற்ற பகுதி மக்களுக்கும் நடக்கலாம் என முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் கண்ணன் கோபிநாதன் எச்சரித்துள்ளார்.

Kannan Gopinathan
author img

By

Published : Sep 27, 2019, 2:19 PM IST

கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன், 2012ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணி எனப்படும் ஐஏஎஸ் அலுவலராகப் பணியாற்றத் தொடங்கினார். டையூ டாமன் யூனியன் பிரதேசத்தில் மின் துறை செயலராக பணியாற்றிவந்த இவர், மத்திய அரசின் மீதான அதிருப்தி காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களின் சுதந்திரத்தின் மீதான கவலையில் தன் பணியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹைராபாத்தில் உள்ள லமாகான் என்ற கலாசார அமைப்பு நடத்திய கருத்தரங்கு கூட்டத்தில் பங்கேற்ற கண்ணன் கோபிநாதன், 'நான் ஏன் ராஜினாமா செய்தேன்?' என்ற தலைப்பில் கருத்துச் சுதந்திரம், காஷ்மீர் விவகாரம் ஆகியவை தொடர்பாகப் பேசினார்.

அப்போது, "ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பின்னர், அம்மாநில மக்கள் தங்களது கருத்து, கோபத்தை வெளிப்படுத்தக்கூட விடாமல் செய்துள்ளது. இது அவர்களின் பேச்சுரிமையையும் கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும் நடவடிக்கையாகும். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்தே நான் என் பணியை ராஜினாமா செய்தேன்" என்றார்

மேலும், "ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், நீதிமன்றம், பொது சமூகம் தொடர்ச்சியாக அமைதி காத்துவருவது எனக்கு வருத்தமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் நமக்கு அந்நியர்கள் அல்ல; நம்மைச் சேர்தவர்கள் வசிக்கும் அப்பகுதியில் நடக்கும் சம்பவங்களை வெறும் செய்திகளாக நாம் கடந்துபோக முடியாது" எனத் தெரிவித்தார்.

கருத்தரங்கில் பங்கேற்று பேசிய கண்ணன் கோபிநாதன்

காஷ்மீர் மக்களுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கலாம் என எச்சரித்த அவர், அரசை மக்கள் கேள்வி கேட்பது என்பது மிகவும் அவசியமான ஜனநாயக உரிமை என்றார். நமது கேள்விகளுக்கு பதில் சொல்லவது அரசின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்தரங்குக்குப் பின் பார்வையாளர்களிடம் கலந்துரையாடிய கண்ணன், அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதையும் பார்க்கலாமே: காண்போரை கவர்ந்திழுக்கும் காஷ்மீர் பாதாம் தோட்டம்

Intro:Body:

'காஷ்மீர் மக்களுக்கு நடப்பது நாளை உங்களுக்கும் நடக்கலாம்' கண்ணன் கோபிநாதன்

கேரள மாநிலம் திரிசூரை சேர்ந்தவர் கண்ணன் கோபிநாத்தன். 2012ஆம் ஆண்டு குடியுரிமைப் பணியில் ஐ.ஏ.எஸ் சேர்ந்த இவர், டையூ டாமன் யூனியன் பிரதேசத்தில் மின் துறை செயலாளராக பணியாற்றிவந்தார்.  

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சிறப்புத் தகுதி  நீக்க நடவடிக்கையை தொடர்ந்து அங்குள்ள மக்களின் சுதந்திரத்தை அரசு பறித்து விட்டதாக் கூறி கடந்த மாதம் தன் வேலையை ராஜினாமா செய்தார்.

தற்போது இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் கண்ணன், பேச்சுரிமை, சுதந்திரம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். 

அந்த வகையில், நேற்று ஹைதராபாத் வந்திருந்த கண்ணன்  "நான் ஏன் ராஜினமா செய்தேன்?' என தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கையை தொடர்ந்து அம்மாநில மக்கள் தங்களது கருத்தை, கோபத்தை வெளியப்படுத்துக்கூட விடமால்   அவர்களது பேச்சுரிமையையும், சுதந்திரத்தை நசுக்கிய வரும் மத்திய அரசை எதிர்த்துப் பேசவே நான் என் வேலை ராஜினாமா செய்தேன். 

ஜம்மு-காஷ்மீர் குறித்து ஊடகமோ, நீதிமன்றமோ, சிவில் சோசைட்டி குழுக்களோ கேள்விகேட்கதிருப்பதான் எனக்கு வருத்தமாக உள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் ஒன்றும் அந்நிய நாடுகிடையாது. அங்கு வாழ்பவர்களும் நம்மைச் சேர்தவர்கள் தான். அங்கு நடக்கும் சம்பவங்களை வெறும் செய்திகள் என்று கடந்த போக முடியாது.

காஷ்மீர் மக்களுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கலாம். அரசை எதிர்த்து கேள்வி கேட்பது மக்களின்  ஜனநாயக உரிமை. அது மிகவும் அவசியமாது. நமது கேள்விகளுக்கு பதில் சொல்லவது அரசின் உரிமை" என்றார். 

தொடர்ந்த, அரசை எதிர்த்து கேள்வி கேட்பதற்காக என்னை 'தேச விரோதி' என்கிறார்கள். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல என்று கருதியும் நீங்கள் அமைதியாக இருந்தால், தேச விரோதி நான? நீங்களா?" என்ற கேள்வி எழுப்பினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.