வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின் சவால்கள் பற்றிய கருத்தரங்கு புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி சமூக அறிவியல் நிறுவனமும் கேரளா நிதி மற்றும் வரிகள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, ”நேரடித் தேர்தல் என்றால் வெற்றிபெற முடியாது என்பதால், அதிமுக மறைமுகத் தேர்தலை கொண்டு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியே எனக்கு கிடைக்கவில்லை. அந்த நிலையில்தான் நாட்டின் நிதி நிலைமை உள்ளது. ஆளுமைக்கான வெற்றிடம் தமிழ்நாட்டில் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை