அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய வம்சாவழி தமிழ்நாட்டை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் துணை அதிபராக தேர்வாகியுள்ளதால் உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில் தமிழ் வார்த்தையான 'சித்தி'யை குறிப்பிடுவார்.
இதனை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கமலா ஹாரிஸின் வெற்றி அவரின் சித்திக்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமை என தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கமலா ஹாரிஸூக்கு வாழ்த்துகள். தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்த வெற்றி உங்களின் சித்திக்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த இந்திய அமெரிக்கர்களுக்கும் பெருமை.
-
Heartiest congratulations @KamalaHarris! Your success is pathbreaking, and a matter of immense pride not just for your chittis, but also for all Indian-Americans. I am confident that the vibrant India-US ties will get even stronger with your support and leadership.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartiest congratulations @KamalaHarris! Your success is pathbreaking, and a matter of immense pride not just for your chittis, but also for all Indian-Americans. I am confident that the vibrant India-US ties will get even stronger with your support and leadership.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020Heartiest congratulations @KamalaHarris! Your success is pathbreaking, and a matter of immense pride not just for your chittis, but also for all Indian-Americans. I am confident that the vibrant India-US ties will get even stronger with your support and leadership.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
உங்களின் தலைமையின் கீழ் இந்திய, அமெரிக்க நாடுகளுக்கிடையேயான துடிப்பான உறவு மேலும் வலுவடையும் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட கமலா, எப்போதும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சொல்லி கொடுத்து வளர்க்கப்பட்டதாகவும் குடும்பம் என்பது தனது கணவர், குழந்தைகள், சகோதரிகள், நண்பர்கள், அத்தைகள், சித்திக்கள் எனவும் தெரிவித்திருந்தார். அப்போது, சித்தி என்ற தமிழ் வார்த்தையை குறிப்பிட்டு பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.