குல்பர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிமி மரியம் ஜார்ஜ், சிறையில் இருந்த மூன்று வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் ஜெவர்கி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜ் கூறுகையில், "ஜெவர்கி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மஞ்சுநாதா ஹுகர் ஒரு பெண்ணை கைது செய்து, குழந்தையுடன் சிறையிலடைத்தார். குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினர், ஜெவர்கி எம்எல்ஏ அஜயா சிங் காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறித்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![Kalaburagi child death case: PSI suspended within 24 hours Kalaburagi child death case மஞ்சுநாதா ஹுகர் குல்பர்கா சிறுமி இறப்பு வழக்கு உதவி ஆய்வாளர் பணி நீக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10135615_blr1.jpg)
பணிநீக்கம்
இந்நிலையில், காவல் ஆணையர் வி.வி. ஜோத்ஸ்னா, விசாரணைக்குப் பின் காவல் உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவார் என உறுதியளித்தையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் விசாரணை நடத்தப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாத் ஹுகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: பெண் ஊழியர் பணிநீக்கம்! - ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க லயோலா கல்லூரிக்கு ஆணை!