நாட்டையே உலுக்கிய கும்பல் வன்முறை வழக்கான பெலுகான் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் ராஜஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், "ஒரு நீதிபதி காவல்துறை விசாரணையால் பெறப்படும் ஆதாரங்களை வைத்துதான் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், காவல்துறை விசாரணையில் குளறுபடி ஏற்பட்டது என தெரியவரும்போது எங்களுக்கு வேதனையாக உள்ளது. இதனால்தான் குற்றவாளிகள் விடுதலையாகின்றனர்.
வழக்கில் ஏற்படும் குளறுபடிகள் குறைக்கவும், காவல்துறையின் விசாரணையை கண்காணிக்கவும் தனி நீதிமன்றங்கள் தேவை. அப்படி இருந்தால் வழக்கின் தீர்ப்பு சிறப்பாக இருந்திருக்கும்" என்றார்.