மேற்குவங்கம் கரிம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவின்போது, மேற்கு வங்க பாஜகவின் துணைத்தலைவர் ஜெய் பிரகாஷ் மஜும்தார், பாஜக முகவர்களை இறக்கிவிடுவதற்காக ராம்நகர் பூத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவர் காரை விட்டு இறங்கியதும் அவருக்கு எதிராக முழக்கமிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் அவரைத் தாக்கத் தொடங்கினார். பின்னர், ஜெய்பிரகாஷ் மஜும்தாரை கொடூரமாக தாக்கி அருகிலுள்ள புதரில் தள்ளினர்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய ஜெய்பிரகாஷ் மஜும்தார், " 50க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் என்னைத்தாக்கினர்.இதனை அருகிலிருந்து பார்த்த காவலர்கள் அந்த குண்டர்களைத் தடுத்து நிறுத்தி என்னை காப்பற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
குண்டர்களுக்குத் துணையாக இருந்த காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க இடைத்தேர்தல் - மம்தாவின் கோட்டையை மீண்டும் அசைக்குமா பாஜக?