தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "எனது 9 வயது மகன் அக்.18ஆம் தேதி இரவு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார்.
அதையடுத்து சிலர் என் மனைவிக்கு போன் செய்து மகன் வேண்டும் என்றால் ரூ. 45 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டிவிட்டு கட் செய்துவிட்டனர். எனவே என மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்தும், சம்பவத்தின்போது கடத்தப்பட்ட சிறுவனுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கோடிக்கணக்கில் கடத்தப்படும் போதை பொருள்: பின்னணியில் யார்?