ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இதில் அனைத்து செய்தியாளர்கள் நாளிதழ், செய்தி தொலைக்காட்சி, இணையதள செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். ஆனால், இதில் மோடி ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்தினை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
ஊடகவியலாளர்கள் கருத்து
இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், இது செய்தியாளர் சந்திப்பு அல்ல.. செய்தியாளர் முன் தோன்றியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
![ராஜ்தீப் சர்தேசாய் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3311385_ra.jpg)
நிதி ரஸ்தான், இது செய்தியாளர் சந்திப்பே அல்ல என பதிவு செய்தார்.
![நிதி ரஸ்தான் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3311385_ni.jpg)
ரானா ஆயுப்: போலித்தனமான செய்தியாளர் சந்திப்பு. மோடி கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவரின் சார்பில் அமித் ஷா கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது.
ரூபா சுப்புரமணியா: இருவேறு விதமான செய்தியாளர் சந்திப்பு. மோடிக்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளிக்கிறார். மேலும் அவர் பதற்றமாக காணப்படுகிறார். மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் நம்பிக்கையுடன் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.
![ரூபா சுப்புரமணியா பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3311385_rupa.jpg)