ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவருகிறது. பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றாலும் கல்வியில் பல சாதனைகளை அது படைத்துள்ளது. இங்கு நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல் மிக பிரபலம். ஜனவரி 5ஆம் தேதி மாலையில் நடைபெற்ற வன்முறை நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ரத்தம் உறையவைக்கும் அச்சம்பவங்களை கேமராவில் பதிவு செய்த ஊடகங்கள் உலகுக்கு காட்டியது. மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெறும் இயக்கத்திற்கு இச்சம்பவம் மேலும் வலுவூட்டியுள்ளது. ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக பல பாலிவூட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். முக்கியமாக, பல்கலைக்கழக வளாகத்திற்கே சென்ற தீபிகா படுகோண் படுகாயம் அடைந்த மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷை சந்தித்து பேசினார். இது மத்திய அரசை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஆனால், வலிமையான மத்திய அரசு பின்வாங்கிவிடவில்லை.
ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து காவல்துறை கடுமையான எதிர்வினையை ஆற்றியது. ஆனால், இதற்கு நேரெதிராக காவல்துறை ஜேஎன்யுவில் நடந்துகொண்டது. ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் கையில் விலங்கு மாட்டி வளாகத்திற்கு வெளியே அனுப்பப்பட்டதையும் முகமூடி அணிந்த கும்பல் ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுதந்திரமாக உலா வந்ததையும் கவனியுங்கள்.
ஜேஎன்யுவை நினைத்தாலே தற்போதை அரசுக்கு கோபம்வருகிறது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் வன்முறை நிகழும்போது வளாகத்திற்கு வெளியே வன்முறைக்கு ஆளான ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், தேச துரோக வழக்கு போன்ற அரசியல் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது அறிவுசார் தாக்குதல் ஜேஎன்யுவின் மீது நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். பல்கலைக்கழகம் மிரட்டப்படுவதாகவும் அவர் கூறுகிறார். தற்போது அது வன்முறையாக வெடித்துள்ளது. மென்மையான ஆங்கிலம் பேசும் பாஜக நலவிரும்பிகளான ஸ்வபன் தாஸ் குப்தா, சந்தன் மித்ரா ஆகியோரே முதன்முதலில் பல்கலைக்கழகம் மீது தாக்குதல் நடத்தினர். வலதுசாரி சிந்தனையாளர்களை இடதுசாரிகள் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் வளரவிட அனுமதித்தில்லை என்பது தொடர்ந்து புகாராக வைக்கப்படுகிறது. இதில், உண்மை இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். தேசியவாதம், தாராளமயமாக்கல், காலநிலை மாற்றம் குறித்த விவகாரங்களில் இடதுசாரிகளுக்கு எதிராக வாதம் செய்து சவால் விடும் வலதுசாரிகள் எங்கே என்ற கேள்வி எழுகிறது. அறிவுஜீவித்தனத்திற்கும் பாஜகவிற்கும் இடையே பிரச்னை உள்ளது. ஜேஎன்யு மீது நடத்தப்படும் அடுத்த கட்ட அரசியல் தாக்குதலுக்கு இதுவே காரணம். முரண் என்னவென்றால் பல்கலைக்கழகத்தின் அறிவுஜீவித்தனம் இழிவாக்கப்படுகிறது. கற்பித்தலும் கற்றலும் சரியான முறையில் நடைபெறவில்லை என பொய்யான கருத்து பரப்படுகிறது.
தற்போதுள்ள அரசுக்கு எதிராக பல்கலைக்கழகம் வெகுண்டு எழுவதை பார்த்தால் ஜேஎன்யு செய்வது சரி என்றே தோன்றுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் மமிதாலா ஜெகதீஸ் குமார் பொறுப்பேற்றதிலிருந்து ஜேஎன்யு மீது நடத்தப்படும் தாக்குதல் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. கடந்த 70 நாட்களாக நடைபெறும் இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட துணை வேந்தர் முன்வரவில்லை. பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் உயர் கல்வி செயலாளருமான சுப்பிரமணியன் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தார். ஆனால், அவர் திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
பொறுப்பேற்றதிலிருந்து தார்மீக அதிகாரத்தை துணை வேந்தர் செலுத்தியதே இல்லை. இதுபோன்ற பிரச்னைகளை இவரை விட குறைந்த அதிகாரத்தை வைத்திருப்பவர்களே தீர்த்திருப்பார்கள் என பலர் கூறுகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை நிகழ்ந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் கூட துணை வேந்தர் அமைதியாகவே இருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தீபிகா படுகோண் பல்கலைக்கழகத்திற்கு சென்றதை விமர்சித்தபோதே அவர் எதற்கு முன்னுரிமை தருகிறார் என்பது தெரிகிறது. தார்மீக ரிதியாக அவர் பதவி விலக வேண்டும் என் நாம் எதிர் பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான்.
பல்கலைக்கழகத்தை அதலபாதாளத்திற்கு துணை வேந்தர் அழைத்து செல்கிறார். பல்கலைக்கழகத்தை சுத்தம் செய்யும் முயற்சியில் துணை வேந்தர் ஈடுபட்டுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து கூறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பார்த்தால், பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வருபவர்களின் நிலை மோசமாக இருப்பதாக ஊடகம் தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற கொந்தளிப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அரியர் தேர்வுகளுக்கான கேள்விகளை மெயில் மூலம் அனுப்பி அதற்கான விடைகளை வாட்ஸ்அப் மூலம் கேட்டது கேலிகூத்தின் உச்சம். நல்லவேலையாக, இதற்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நாடகத்தின் மோசமான பகுதி என்பது மாணவர்களுக்கு துக்டே துக்டே கும்பல் என பெயரிட்டது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக வெறுப்பு பரப்புரையை மேற்கொண்டுவரும் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிதான் மாணவர்களுக்கு இந்த பெயரை இட்டார். பல்கலைக்கழகத்தின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் இம்மாதிரியான ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை ஜேஎன்யு துணை வேந்தர் எதிர்க்கவில்லை எனில் அவர் எம்மாதிரியான துணை வேந்தர் என கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க: உயிருள்ள புறாவை சாப்பிட்ட பெண் - சோக பின்னணி!