ETV Bharat / bharat

தயவு செய்து வீட்டுக்கு போங்க! - ஜேஎன்யு நிர்வாகம் அறிவுறுத்தல்

டெல்லி : கோவிட்-19 தொற்றின் தாக்கம் நகரில் அதிகரித்து வருவதால், விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Jawaharlal Nehru University
Jawaharlal Nehru University
author img

By

Published : Jun 9, 2020, 8:18 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்நகரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்பட பல விஷ்யங்களிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுகாதார நிலையத்தில் உள்ள மருந்தக ஊழியருக்கு, சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள் துறை அமைச்சகமும் டெல்லி அரசும் வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் நாங்கள் முறையாக பின்பற்றி வருகிறோம். ஆனாலும், இந்த கரோனா காலத்தில் ஒருவருக்கு வீடுகளைத் தவிர வேறெந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது.

தற்போதுள்ள நிலைமையை வைத்து பார்க்கும்போது, பல்கலைகழகம் மீண்டும் திறக்கப்படுவது குறைந்தபட்சம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தள்ளிப் போகலாம். டெல்லியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, விடுதியிலுள்ள மாணவர்கள், விரைவில் வீடுகளுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே விடுதியைவிட்டு வெளியேறிய மாணவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை பல்கலைகழகத்திற்குத் திரும்பக்கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உயிருக்கு உத்தரவாதம் இல்லை: உயர் நீதிமன்றத்தை நாடிய 2 வயது குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.