ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் நிரந்தர இடங்களைக் கொண்ட பல அமர்வுகளுக்கு நிர்வாக தீர்ப்பாயங்களை அமைக்கக்கோரி புதன்கிழமை (மே13) மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ஜம்மு-காஷ்மீரில் நிரந்தர இடங்களைக் கொண்ட தேவையான அமர்வுகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. நிலுவையில் உள்ள 31 ஆயிரத்து 641 சீரமைப்பு விஷயங்கள் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் இரு பிரிவுகளிலிருந்தும் நிர்வாக தீர்ப்பாயங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
அதேபோல் ஜம்மு-காஷ்மீரில் நிர்வாக தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட வேண்டும். சண்டிகரில் செயல்படும் ஒரு சுற்று அமர்வு மட்டுமே ஜம்மு-காஷ்மீர் யூனியன் மற்றும் லடாக் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமானதாக இருக்காது.
மேலும், மிகக் குறைந்த அளவில் நிலுவையில் உள்ள மாநிலங்களுக்குகூட, தனித்தனி தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டுளளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சில, பெரிய மாநிலங்களைவிட அதிகம்.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் நிரந்தர இடங்களைக் கொண்ட அமர்வுகள் கொண்ட நிர்வாக தீர்ப்பாயம் இல்லாவிடில், நீதியை பெறுவதற்கான அடிப்படை உரிமை மற்றும் செயல்திறன் மிக்க நியாயமான எதிர்பார்ப்பு, முறையான தீர்வுகள் ஆகியவை பாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீர்: '4ஜி இணைய சேவை' வழங்க ஆணையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!