ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமி, மாலை பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த மூன்று நபர்கள் கடத்தி புதிதாகக் கட்டப்படும் கட்டடத்தின்கீழ் வைத்து பாலியல் வன்புணர்வுசெய்தனர்.
இதுமட்டுமின்றி இச்சம்பவத்தை தனது செல்போனில் அவர்கள் படம்பிடித்துள்ளனர். இதை வெளியே கூறினால் காணொலியை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டினர்.
இதனால், அச்சமடைந்த சிறுமி பயத்தில் வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். அடுத்த நாள் காலை சிறுமிக்கு அதீத வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த பிறகுதான் உண்மைகள் வெளிவந்தன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முகமது ரஷீத், முகமது அக்பர் முகமது ஃபைசல் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.
இந்த வழக்கு தற்போது போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சித் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டார். மேலும், மூவரும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸாக நடித்து ரூ. 8 லட்சம் மோசடி - இருவர் கைது