ஆந்திராவில் இன்று ஒரே கட்டமாக 25 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் அம்மாநிலத்தின் 175 சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை முதலே நடந்து வருவதால், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கூட்டி (gooty) வாக்குச்சாவடியில் ஜன சேனா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை வேட்பாளர் மதுசூதனன் குப்தா வாக்குப்பதிவு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்தார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த மதுசூதனனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.