சில ஆண்டுகளுக்கு முன் ஜன சேனா கட்சியைத் தொடங்கிய பவன் கல்யாண், நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஆந்திராவில், ஜன சேனா கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. 175 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், அக்கட்சி 140 இடங்களில் போட்டியிடுகிறது. 25 நாடாளுமன்ற தொகுதிகளில், 18 இடங்களில் அக்கட்சி போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இடதுசாரி கட்சிகள் தலா 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும் நடைபெறும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பவன் கல்யாண் கஜூவாகா மற்றும் பீமாவரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நின்று போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜூவாக தொகுதி விசாகப்பட்டினம் மாவட்டத்திலும் பீமாவரம் தொகுதி மேற்கு கோதாவரி மாவட்டத்திலும் உள்ளது.