இந்திய எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் துப்பாக்கி, மோட்டார் குண்டுகளை பாகிஸ்தான் ராணுவம் அதிகமாகப் பயன்படுத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேரை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அதில் நான்கு பேர் தப்பியோடினர்.
மான்கோட் பகுதியில் தொடர்ந்து இருதரப்பு ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவிவருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்திய ராணுவத்தின் துரித நடவடிக்கையால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இதையும் படிங்க: தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட் - தலைவர்கள் இரங்கல்