ETV Bharat / bharat

இந்திய-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆலோசனை - காரணம் என்ன? - ஆப்கானிஸ்தான் அமைதி

வாஷிங்டன்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்திய-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தொலைப்பேசி வழியே ஆலோசனை நடத்தினர்.

Jaishankar - Pompeo talk
Jaishankar - Pompeo talk
author img

By

Published : Aug 7, 2020, 4:37 PM IST

கோவிட்-19 தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோவும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தொலைப்பேசி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதி தொடர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மைக் பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க-இந்தியா உறவு, கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடனான ஆலோசனை மிகச் சிறப்பாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், இந்தோ பசிபிக் பகுதியில் இறையாண்மையை பாதுகாக்கவும் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த உரையாடல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை முதன்மை செய்தித் தொடர்பாளர் காலே பிரவுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்னைகள் குறித்து நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இருநாட்டு அமைச்சர்களும் இது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிக்டாக் செயலிக்குத் தடை - அதிரடி காட்டும் ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.