ETV Bharat / bharat

சுற்றுச்சூழல் துறை அமைச்சக ஒப்புதல்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

டெல்லி : கரோனா ஊரடங்கு காலங்களில் பல்வேறு திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் துறை அளித்துள்ள ஒப்புதல்களுக்கு, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

jairam ramesh
jairam ramesh
author img

By

Published : May 25, 2020, 1:08 AM IST

இதுகுறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில், "ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் கேட்டு மிகவும் துயரத்திற்குள்ளாகியுள்ளோம். ஆனால், ஆச்சரியப்படவில்லை.

இந்த உலகம் கண்டுவரும் சுகாதாரப் பேரிடர், வரப்போகும் சுற்றுச்சூழலின் பேரிடருக்கு அறிகுறியாய் அமைந்துள்ளது. நாம் ஆழ்ந்து சிந்திக்க, நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது.

ஆனால், உங்கள் அமைச்சகமோ எதையும் கண்டுகொள்ளாமல், முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ஆகையில், இதுபோன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஒப்புதல் அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற சுற்றுச்சூழல் நிலைக் குழுவின் தலைவர் ஆவார்.

இதையும் படிங்க : இ பாஸ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி...! விமான பயணத்துக்கான நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.