நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அதில் மாபெரும் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் ஆந்திர அரசியலில் பல அதிரடி நிகழ்வுகள் நடந்துவருகின்றன.
இந்நிலையில், ஆந்திர பயிர் சாகுபடி விவசாயிகள் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவால், 16 லட்சம் குத்தகை விவசாயிகள் வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியும். மேலும் காப்பீட்டுத் தொகை, ஆண்டுக்கு ரூ.12,500 உள்ளீட்டு உதவிகளும் கிடைக்கும்.
இது குறித்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, "இத்திட்டத்தால் பெருவாரியான குத்தகை விவசாயிகள் பலன் பெறுவார்கள். அதே சமயம் 11 மாதங்களுக்குள்ளாக குத்தகைக்குக் கொடுக்கும் எந்தவொரு நில உரிமையாளரும் இத்திட்டத்தால் பாதிக்கப்படமாட்டார்கள்" என்றார்.
லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்கக்கூடிய இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.