ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை முதலமைச்சர் பதவியை ஏற்க வருகிற 30 தேதி ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஜெகன் மோகன் ரெட்டி வருகிற 30 தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தறுமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.