ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி, மேக்ஸி கார் ஓட்டும் சுயதொழில் ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்டோ ஓட்டுநர் போன்ற உடையணிந்து தொடங்கிவைத்தார்.
வாகனத்தின் காப்பீடு செலவு, வாகனத்தை பராமரித்தல் போன்ற செலவுகளுக்காக இந்த பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவோர் அரசிடம் விண்ணப்பித்து இந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நேரடியாக இந்த பணம் ஓட்டுநர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டநர்களிடம் உறையாற்றிய ஜெகன் மோகன் ஆட்டோ ஓட்டுநர்களின் சிரமங்களை நான் அறிவேன் என்றும், தினமும் ரூ.200, ரூ.500 வருமானத்திற்காக அவர்கள் கடுமையாக உழைப்பதாகவும் கூறினார். தேர்தல் பரப்புரையில் தான் கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி வைத்துள்ளதாகவும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை என்றும் ஜெகன் மோகம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அங்கீகாரமில்லாத ஆட்டோ ஸ்டாண்ட்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு!