ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையில் ராணுவம் அம்மாநில காவல்துறையுடன் சேர்ந்து தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இச்சூழலில் நேற்று (ஆக்.29) ஒரே நாளில் இரண்டு முக்கிய பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையைப் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். இதுதொடர்பாக, ராணுவ மேஜர் ஜெனரல் சென்குப்தா பேசுகையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவத்தினருக்கு கிடைத்த முக்கிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில் பயங்கவரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் எட்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஒருவர் சரண் அடைந்துள்ளார். உயிரிழந்த அனைவரும் இளைஞர்கள், இவர்கள் அனைவரும் நிகழாண்டு (2020) தொடக்கம் முதல் பயங்கரவாதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வலைவீசி வருகின்றன. ஓராண்டில் மட்டும் 80 பேரை பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட பயங்கரவாத அமைப்புகள் புதிதாக களமிறக்கியுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சினிமா தயாரிப்பாளர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட 'தலித்' இளைஞர்!