ஜம்மு-காஷ்மீர் தோதா மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குஜ்ஜர் - பகிர்வால் விடுதியில் இருந்து மாணவர்கள் பத்து நிமிடம் தாமதமாக பள்ளிக்கு வந்ததற்கு ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மாணவர்கள் தாமதமாக வந்ததால், அடித்ததாக ஆசிரியர் ஒப்புக்கொண்டதாகவும், அவர் குழந்தை நல ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் இல்லையெனில் அவர்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.