ETV Bharat / bharat

ஜம்மு - காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது...!

ஸ்ரீநகரில் உள்ள வாட்ச் கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற பாஜக கட்சியினரை ஜம்மு & காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

j-and-k-police-detain-bjp-workers-trying-to-hoist-tricolour-in-srinagar

author img

By

Published : Oct 26, 2020, 4:57 PM IST

Updated : Oct 26, 2020, 5:02 PM IST

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைக்காக மக்கள் ஜகநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி சென்ற ஆண்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்கு பின்னர் அக்.13ஆம் தேதி அவர் வீட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் கூறுகையில், ஜம்மு & காஷ்மீரின் கொடி மீட்டெடுக்கப்படும் வரை வேறு எந்த கொடியையும் ஏற்றமாட்டேன் என்றார்.

இதனிடையே ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் சிறப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக முக்கியமான 7 கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணியின் தலைவராக ஃபரூக் அப்துல்லா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதைப்பற்றி ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ''இந்தக் கூட்டணியின் பெயர் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி ஆகும். இதன் முக்கிய நோக்கம் மீண்டும் சிறப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தான். இது ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. ஆனால் பாஜகவிற்கு எதிரான போராட்டம் தான். அதுவும் ஜனநாயக வழியிலான போராட்டம்'' என்றார்.

இதனைத்தொடர்ந்து மெஹபூபா முப்தியின் கருத்துக்கள் பாஜக கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாநிலத்தின் முக்கிய இடங்களில் தேசியக் கொடியை ஏற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பாஜகவினர், இன்று வாட்ச் கோபுரத்தில் கொடியை ஏற்ற முயன்றுள்ளனர். இவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பு: ஜே.பி. நட்டா கண்டனம்

Last Updated : Oct 26, 2020, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.