ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஜம்மு காஷ்மீர் காவலர்கள், ராணுவம், ராஷ்ட்ரீய ரைபில்ஸ் பிரிவு காவலர்களுக்கு ரகசிய உளவுத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் அப்பகுதியில் காவலர்கள், ராணுவம், ராஷ்ட்ரீய ரைபில்ஸ் படைப்பிரிவுகள் கூட்டுத் தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த சபீர் அஹமது பரே, ஷெரீஸ் அஹமது தார், சபத் அஹமது மிர், இஷாக் அஹமது ஷா என்பது தெரியவந்தது.
இதையடுத்து இவர்களைக் கைதுசெய்த பாதுகாப்புப் படையினர் நால்வரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். இவர்களிடமிருந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கும் நோட்டீஸ்கள், பணம், ஆபத்தான வெடிப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய மூத்தக் காவல் அலுவலர், “பயங்கரவாதிகள் நால்வரும் அவந்திபோரா பகுதியிலுள்ள நாகா சாலைப் பகுதியில் கைதுசெய்யப்பட்டனர்” என்றார்.
இதையும் படிங்க: புல்வாமா, ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!