ஆந்திர மாநிலம் விசாகாப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ராசாயண நிறுவனத்தில் இருந்து ஸ்டைரீன் வாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் மேலும் பலபேர் இந்த விஷவாயுவினால் பாதிக்கப்பட்டனர்.
இதனை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம், குழு ஒன்றை அமைத்தது ஓய்வு பெற்ற நீதிபதி சேஷயானா ரெட்டியை இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருந்து. அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி சேஷயானா ரெட்டி, தன் விசாரணையை முடித்து தேசிய பசுமை தீர்பாயத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இந்த விஷவாயுக் கசிவை தடுக்க தவறிவிட்டார்கள், அவர்களின் இந்த அலட்சியப்போக்கினால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
விபத்து நடந்த கடந்த மே 7ஆம் தேதியன்று இரவு 2.42 மணியளவில் ஸ்டைரீன் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அந்நிறுவனத்தில் உள்ள எச்சரிக்கை ஒலி 2.54 மணியிலிருந்து - 3.02 மணிவரை ஒலித்தது. மேலும் இரவு பணியில் இருந்த ஊழியர்கள் மற்ற ஊழிர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
3.30 மணியளவில் அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தைவிட்டு வெளியேறினர். தொடர்ந்து காலை 5.15 மணிக்கு வெளியேறிய ஸ்டைரீன் வாயுவை கட்டுப்படுத்தும் ராசாயணத்தை வெளி கொண்டு வர அவர்கள் தவறிவிட்டார்கள்.
குறிப்பாக ஸ்டைரீன் ரசாயணம் இருக்கும் டேங்கை, சுற்றி டிபிசி என்னும் ரசாயணம் இருந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல்போனதுதான் இந்த விபத்து நடக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பொதுவாக ஸ்டைரீன் இருக்கும் டேங் அதிக வெப்பம் அடையாமால் இருக்க, அதனைக் குளர்ச்சியடை செய்யும் கருவி கொண்டு குளிரவைப்பார்கள். வழக்கமாக இரவு நேரங்களில் ஐந்து மணி நேரம் அதை அணைத்துவிடுவார்கள். விபத்து நடந்த முன்தினம் அதை வழக்கம்போல் செய்துள்ளார்கள். இதனால் வெப்பம் அதிகரித்து வாயு வெளியேறியதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு